Wednesday, August 12, 2015

இன்றே செயல்படு

இன்று
உன்னுடைய முயற்சிகளுக்கு
முட்டுக்கட்டை போடுபவர்கள்
நாளைய
வெற்றிக்குப்
பூமாலை சூட்ட
நிச்சயம் வருவார்கள்!
பஞ்சமில்லா பிரபஞ்சம்
உனக்கு மட்டுமென்ன
ஓரவஞ்சமா பார்க்கப் போகிறது?
தென்றலின் சுகம் காண
இன்றே செயல்படு!